தமிழகத்தில் மே-4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் களம் தற்போது விஜயை ஒட்டுமொத்தமாக உன்னித்து கவனித்து வருகிறதே என்று சொல்லலாம். ஏனெனில் வீட்டில் இருக்கும் சிறிய குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விஜய்க்கு ஏராளமான ஆதரவு. குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த முறை விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியது சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக விஜய் மீது புகார் கூட கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது செய்தியாளர்களை சந்தித்தபோது பேசினார்.
அவர் பேசியதாவது, குழந்தைகளை குடும்ப உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும். இது தொடர்பாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தாங்கள் தான் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருப்பது இயல்புதான். எனவே தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும் கண்டிப்பாக அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனம் வேண்டும். நடிகர்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பது உண்டு. எனவே அதிர்ச்சிகரமான சம்பவங்களை தவிர்க்க தேர்தலில் வெற்றி தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என இளம் தலைமுறையினர்களுக்கு அவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். மேலும் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் இந்த சமூக பொறுப்பு உண்டு என்றார்.
