தமிழக வெற்றிக்கழகத்தின் சென்னை துறைமுகம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியவர் சினோரா அசோக். இவர் தற்போது தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே துறைமுகம் தொகுதியில் தேர்தலின் சமயத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சினேரா அசோக் இடையே வார்த்தை மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட அசோக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளி வந்தன. மேலும் இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.