தொலைந்து போன பர்ஸ் ஒன்றைக் கண்டெடுத்த இளைஞர், அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து ஒப்படைக்க எடுத்த முயற்சி இணையதளத்தில் நகைச்சுவையான விவாதமாக மாறியுள்ளது. ஜோனா ஜான்சன் என்ற இளைஞர் தான் கண்டெடுத்த கருப்பு நிற பர்ஸை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அந்த பர்ஸில் இருந்த அடையாள அட்டையில் ‘குர்நீத் சிங்’ என்ற பெயர் இருந்தது. உரிமையாளரை அடையாளம் காண வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் அந்தப் பெயரை வீடியோவில் காட்டினார்.

ஆனால், இதைப் பார்த்த இணையவாசிகள் அந்தப் பெயரையும் புகைப்படத்தையும் வைத்து விளையாடத் தொடங்கினர். கமெண்ட் பகுதியில் பலரும் தாங்கள் குர்நீத் சிங்கின் உறவினர்கள் என்று கூறி பொய்க் கணக்குகளை உருவாக்கினர்.

“அவர் என் தந்தை”, “அவர் என் ஒன்றுவிட்ட சகோதரர்” என்று ஆளாளுக்கு ஒரு கதையைக் கூற, ஒரு படி மேலே போய் சிலர் நாய் போல குரைத்து “நான்தான் குர்நீத்தின் செல்லப்பிராணி, என்னிடம் கொடுங்கள்” என்று கிண்டல் செய்தனர்.

ஒரு நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த வீடியோ, இறுதியில் இணையத்தில் ஒரு மிகப்பெரிய நகைச்சுவை டிரெண்டாக மாறிப்போனது.