தேர்தல் பணிக்காக அவசரமாக அழைக்கப்பட்டதால், ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைக்காமல் கழிவறை அருகே தரையில் படுத்து உறங்கிய இரண்டு ராணுவ வீரர்களைப் பார்த்த TTE-யின் செயல் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. அவர்களின் அடையாள அட்டையைச் சரிபார்த்த அவர், தரையில் உறங்கிய வீரர்களின் நிலையை உணர்ந்து உடனடியாக அவர்களுக்கு மாற்று இருக்கைகளை ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

“எல்லைக் காவல் தெய்வங்களுக்குக் கழிவறை அருகே இடமா?” என அவர் காட்டிய அந்த மரியாதை, இன்று இணையவாசிகளின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. கடமை தவறாத அந்த TTE-யின் இந்தச் செயல், சீருடை அணிந்த வீரர்களுக்குநாம் செய்யும் மிகச்சிறந்த கௌரவமாகும். அவசர காலங்களில் தேச சேவையாற்றச் செல்லும் வீரர்களின் சிரமத்தைப் புரிந்து கொண்டு, விதிகளையும் தாண்டி மனிதாபிமானத்துடன் உதவிய அந்த அதிகாரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தச் சம்பவம் ரயில்வே துறையின் மீதான நன்மதிப்பை உயர்த்துவதுடன், சக மனிதர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.