இன்டீரியர் வேலைகள் அனைத்தையும் முடித்த பிறகு, பேசியபடி பணத்தைத் தர வீட்டு உரிமையாளர் மறுத்ததால், ஆத்திரமடைந்த கான்ட்ராக்டர் தனது குழுவினருடன் சேர்ந்து செய்த வேலைகளை அப்படியே பிரித்தெடுத்த சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “வேலை முடிஞ்சா காசு தரணும், இல்லன்னா செஞ்ச வேலையைத் திரும்ப எடுத்துப்போம்” என்கிற பாணியில், பொருத்தப்பட்ட பிட்டிங்ஸ் மற்றும் மெட்டீரியல்களை தொழிலாளர்கள் ஒவ்வொன்றாக அகற்றும் காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியாயமாக உழைத்தவனுக்கு ஊதியம் கிடைக்காதபோது இது போன்ற அதிரடி முடிவுகள் தான் எடுக்கப்படும் என ஒரு தரப்பினர் கான்ட்ராக்டருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது போன்ற மோதல்கள் சட்டரீதியாக அணுகப்பட வேண்டுமா அல்லது நேரடியாகக் களத்தில் இறங்கி வேலையைப் பிரிப்பதே சரிதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முறையான ஒப்பந்தங்கள் (Written Contracts) மற்றும் முன்பணம் (Advance Payment) போன்ற நடைமுறைகள் இல்லாததே இதுபோன்ற பொதுவெளி மோதல்களுக்குக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தச் சம்பவம் கட்டுமான மற்றும் இன்டீரியர் துறையில் நிலவும் தொழில்முறை ஒழுக்கம் மற்றும் பணப்பரிவர்த்தனை சிக்கல்கள் குறித்த ஒரு பெரிய விவாதத்தையே சமூக வலைதளங்களில் உருவாக்கியுள்ளது.
