பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பேருந்து நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் வெளிப்படையாக நடக்கும் சட்டவிரோத பாலியல் தொழில் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் மற்றும் விலை விவரங்கள் வெளியாகி அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜலந்தர் பேருந்து நிலையத்தில் தினமும் இரவு 9 மணிக்கு மேல் விபச்சாரச் செயலில் ஈடுபடும் கும்பல் தீவிரமாகச் செயல்படத் தொடங்குகிறது. கவர்ச்சிகரமான உடைகளில் வலம்வரும் பெண்கள், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களை உன்னிப்பாகக் கண்காணித்து பேரம் பேசுகின்றனர். வாடிக்கையாளர்கள் நிற்கும் கார்களின் அருகில் சென்று பேசும் பெண்கள், ஒருவருக்கான கட்டணமாக ரூ. 1,500 என்றும், முழு இரவுக்கான கட்டணமாக இரு நபர்களுக்கு ரூ. 8,000 வரை கேட்பதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் பேரம் பேசி இறுதித் தொகையாக ரூ. 7,000 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் கூடுதல் பெண்களைக் கேட்டால், ஒரு பெண்ணுக்கு ரூ. 5,000 வீதம் இருவருக்குச் சேர்த்து குறைந்தபட்சம் ரூ. 10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நண்பர்களின் பங்கையும் பிரித்துத் தர வேண்டும் என்பதில் தரகர்கள் உறுதியாக இருப்பதும் அம்பலமாகியுள்ளது. பேரம் பேசி முடிக்கப்பட்டதும், உடனிருக்கும் மற்றொரு நபர் மூலமாக வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ஹோட்டல்கள் அல்லது அந்தரங்கமான தனியார் இடங்கள் உடனடியாக ஏற்பாடு செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

 

பொது இடத்திலேயே பகிரங்கமாக நடைபெறும் இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்குப் காவல்துறையினர் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.