உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கயிறு கழுத்தில் சிக்கியதில், 45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. லலித்பூர் பகுதியிலிருந்து தனது கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நேர்ந்துள்ளது.

அவர் நவோதயா வித்யாலயா அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே யாரோ கட்டியிருந்த கயிறு எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த திடுக்கிடும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் குறுக்கே அந்த கயிற்றைக் கட்டியது யார், என்ன காரணத்திற்காகக் கட்டப்பட்டது அல்லது யாராவது வேண்டுமென்றே இந்தச் சதியைச் செய்தார்களா என்பது குறித்துத் இதுவரை தெளிவான விவரங்கள் வெளிவரவில்லை.

Lalitpur, Uttar Pradesh – A 45-year-old motorcyclist died on the spot after a rope stretched across a road got entangled around his neck in Lalitpur district.The incident occurred near Navodaya Vidyalaya on the Lalitpur-Jakhaura road close to Dailwara village. The victim resident… pic.twitter.com/zhSZXWlIzW

— NextMinute News (@nextminutenews7) August 18, 2026

“>

இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கயிற்றைக் கட்டிய நபரைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.