வேலை தேடும் அவசரத்தில் இளம் பெண் ஒருவர் செய்த சிறிய தவறு இணையதளத்தில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ஹிமான்ஷி என்ற பெண் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்காக விண்ணப்பித்தபோது, தனது சுயவிவரக் குறிப்பை இணைப்பதற்குப் பதிலாக, தவறுதலாக ‘பிளிங்கிட்’ செயலியில் மளிகைப் பொருட்கள் வாங்கியதற்கான ரசீதை மின்னஞ்சல் செய்துள்ளார்.
அந்த மின்னஞ்சலைத் திறந்த அதிகாரி, அனுபவம் மற்றும் திறமைகளுக்குப் பதிலாக பால், தயிர் மற்றும் தின்பண்டங்களின் பட்டியலைக் கண்டு திகைத்துப் போனார். பின்னர், “நீங்கள் தவறுதலாக ரசீதை அனுப்பிவிட்டீர்கள்” என்று அவர் பணிவுடன் பதிலளித்துள்ளார்.
தனது இந்தத் தர்மசங்கடமான நிலையை ஹிமான்ஷி சமூக வலைதளமான X-ல் பகிர்ந்து, “நானே எனக்குப் மிகப்பெரிய எதிரி” என்று தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டார். இந்த பதிவு வைரலாகி சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
i am my own worst enemy pic.twitter.com/W4KpT6HUn3
— loser (@usernamekyaahai) March 30, 2026
“>
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “நல்லவேளை சம்பளச் சீட்டை அனுப்பவில்லை” என்றும், “வேலையை மறுக்க மனிதவளத் துறைக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்துவிட்டது” என்றும் நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தனக்கு ஒரு இலவச ஐஸ்கிரீமாவது கொடுக்குமாறு அந்தப் பெண் பிளிங்கிட் நிறுவனத்திடம் வேடிக்கையாகக் கேட்டுள்ளார்.
