ஹைதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறியும் சோதனையின் போது, போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன ஓட்டியை அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மதுபோதையில் இருந்ததால், காவலர் பலமுறை கேட்டும் மூச்சுக்காற்று பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பொறுமை இழந்த காவலர், அந்த நபரை கன்னத்தில் அறைந்த காட்சி இணையத்தில் வைரலாகி, பொதுமக்களிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இணைய பயனர்கள் இருவேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். காவலர் தனது கடமையைச் செய்யும்போது கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு குடிமகனை அடித்தது தவறு என்றும் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“>

அதேவேளையில், போதையில் வாகனம் ஓட்டி மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்களுக்கு இது போன்ற கடுமையான அணுகுமுறை தேவை என்று மற்றொரு தரப்பினர் காவலருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.