தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் இந்த வாரம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தற்போது நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் விஜய் கிட்னி திருட்டை கையில் எடுத்தார். அதாவது நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கவிதையுடன் தன்னுடைய பரப்புரையை தொடங்கிய விஜய் திமுக எம்எல்ஏவின் மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடப்பதாக குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு அடுத்த வருடம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு கிட்னி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றார். அதன்பிறகு தொடர்ந்து பேசிய விஜய் புதிதாக ஏதாவது சொல்லுங்கள் என்றால் என்ன சொல்லட்டும் திமுகவை போன்று பொய் வாக்குறுதி கொடுக்கட்டுமா.? செவ்வாய் கிரகத்தில் வீடு கட்டுவோம், அமெரிக்காவுக்கு ஒற்றையடி பாதை வழங்கப்படும் போன்று ஏதாவது சொல்லட்டுமா? எது நடக்குமோ எது சாத்தியமோ அதை மட்டும்தான் தமிழக வெற்றிக்கழகம் சொல்லும் செய்யும் திமுகவைப் போன்று பொய் வாக்குறுதி எதுவும் கொடுக்காது என்றார்.
பின்னர் திமுகவின் வாக்குறுதிகளை லிஸ்ட் போட்டு நடிகர் விஜய் அதை எல்லாம் நிறைவேற்றினர்களா என்று கேட்டார். அதாவது போக்குவரத்து ஹப்பாப்பாக உள்ள நாமக்கல் முட்டையும் ரொம்ப ஃபேமஸ். தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவான முட்டையை கொடுக்கும் ஊராக மட்டுமல்லாமல் உணர்ச்சியூட்டு மண்ணும் இதுதான். தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்கியது நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன் தான். மேலும் இட ஒதுக்கீடு உரிமையை வழங்கிய சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயனுக்கு மணிமண்டபம் கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி 456 இல் சொன்னீங்களே அதை கட்டிக் கொடுத்தீர்களா என்று கேட்டார்.
