தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ‘ஆட்சியில் பங்கு’ வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது திமுக தலைமைக்கு ஒருவித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இச்சூழ்நிலையில், மாணிக்கம் தாகூர் எம்பி இன்று தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில், மகாக்கவி பாரதியாரின் புகழ்பெற்ற “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…” என்ற பாடலைப் பதிவிட்டுள்ளார்.

“>

 

“எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டாலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்” என்பதைத் தெரிவிக்கும் வகையிலேயே அவர் இந்தப் பாடலை மேற்கோள் காட்டியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.