தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இமயமலை பயணம் சென்றிருந்த ரஜினி நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசம் மாநிலம் சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் சந்தித்த ரஜினி மரியாதை நிமித்தமாக அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது நிலையில் தற்போது நடிகை ஸ்ரீ ரெட்டி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது ரஜினிகாந்த் காலில் விழவில்லை, குனிந்து வணங்கினார் என்று கூறியுள்ளார். இதற்கு ரஜினிகாந்த்தும் ஆன்மீகவாதி தானே யோகி ஆதித்யநாத் குனிந்து வணங்கி இருக்கலாமே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.