“திமுக ஆட்சியைவிட நீங்க ஒரு ரூபா கம்மியா கடன் வாங்கிக் காட்டினாலும், என் பதவியை விட்டுட்டு நான் விலகத் தயார் !” என்று தமிழக முன்னாள் நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுத்துள்ள பகிரங்க சவால் அரசியல் அரங்கில் பெரும் தீயாய் பரவி வருகிறது.

தவெக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால் மட்டும் குறைந்தபட்சம் ரூ. 6 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்று சுட்டிக்காட்டிய அவர், இவர்களுடைய 5 ஆண்டுகால ஆட்சி முடிவில் தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ. 20 லட்சம் கோடியாக எகிறிவிடும் என்று மிகக் கடுமையாக விமர்சித்தார்.

மாநிலத்தின் உண்மையான நிதி நிலைமை நன்றாகத் தெரிந்திருந்தும், சாத்தியமே இல்லாத தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு, தற்போது அதற்குப் பல முட்டுக் கொடுக்கும் காரணங்களைக் கூறி தவெகவினர் தப்பிக்கப் பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசு கடன் வாங்குவதில் தவறில்லை என்றும், ஆனால் தவெகவினர் செய்யத் துடிக்கும் இந்த விசித்திரக் கணக்கு தமிழகத்தைப் பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்றும் எச்சரித்தார்.

“>