அதிமுக-விலிருந்து விலகிய சி. விஜயபாஸ்கர் மீதான தாக்குதலை ஆர்.பி. உதயகுமார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். “வழக்கில் இருந்து தப்பிக்கவும், முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்ளவுமே நீங்கள் சுயநலமாகத் தவெக-வை நோக்கித் தாவுகிறீர்கள்” என்று அவர் காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பத்து ஆண்டுகளாகத் தலைமையின் அருகிலேயே இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு, இப்போது தலைமை சரியில்லை என்று பேசுவது துரோகம் என்று ஆர்.பி. உதயகுமார் விளாசியுள்ளார்.

“பதவி சுகத்திற்காகக் கட்சியை விட்டுச் செல்லும் உங்களைப் போன்றவர்களால் தொண்டர்களின் மனது எவ்வளவு கஷ்டப்படும் தெரியுமா? மனசாட்சி இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய அவர், விஜயபாஸ்கரின் இந்த விலகல் முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்தது என்று விமர்சித்துள்ளார். அடிமட்டத் தொண்டர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டு, தனது வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இந்த நாடகத்தை அவர் நடத்துகிறார் என்று ஆர்.பி. உதயகுமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.