முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தவெக தாவல் குறித்துத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஆர்.பி. உதயகுமார், அந்த முடிவின் பின்னணியில் இருக்கும் “மர்மத்தை” வெளிப்படையாகப் பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “தவெக நல்ல கட்சி என்றால் தேர்தலுக்கு முன்பே ஏன் இணையவில்லை? இப்போது அமைச்சர் பதவி கிடைக்காது என்று தெரிந்ததும், நாடகமாடி கட்சி மாறுகிறீர்கள்” என்று சாடியுள்ளார்.
“சொந்தக் கட்சியில் ஜெயித்தால் மட்டுமே மதிப்பு, வேறு கட்சிக்குத் தாவினால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள்” என்று எச்சரித்த ஆர்.பி. உதயகுமார், “தனிப்பட்ட வாழ்வாதாரத்திற்காகத் தொண்டர்களின் எதிர்காலத்தைக் காவு கொடுக்காதீர்கள். இந்த துரோகத்தைத் தொண்டர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நீங்கள் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவீர்கள்” என்று ஆவேசமாக எச்சரித்துள்ளார். விஜயபாஸ்கரின் இந்தத் திடீர் முடிவு வெறும் அதிகாரத் தேடல் மட்டுமே என்பதை ஆர்.பி. உதயகுமார் இன்று அம்பலப்படுத்தியுள்ளார்.
