தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி YMCA நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தன்னுடைய twitter பக்கத்தில், டிக்கெட் மற்றும் மேற்கொண்ட தகவல்களுக்கு insider.in என்ற இணையதளம் முகவரிக்கு சென்று பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த இசை நிகழ்ச்சியில் டிக்கெட்டுக்கான விலை 1500 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.