தென்காசி மாவட்டத்தில் உள்ள அடைக்கலப்பட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவில் வசித்து வருபவர் தான் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் சுப்பம்மாள் காலில் புண் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவர் சரவணகுமார் சுப்பமாளுக்கு சிகிச்சை பார்த்துள்ளார். இந்நிலையில் சிகிச்சையின் போது திடீரென சுப்பம்மாள் உயிரிழந்து விட்டார்.

அதன்பின் உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் சுப்பம்மாள் இறந்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுப்பமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான விசாரணையில் சரவணகுமார் ரஷ்யாவில் மருத்துவம் படித்ததோடு தமிழகத்தில் பயிற்சி பெற்று மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தது தெரியவந்தது. இருப்பினும் சரவணகுமார் தனியார் ஆஸ்பத்திரி துவங்குவதற்கும் மருந்தகம் நடத்தி வருவதற்கும் அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.