கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள திம்மப்புரா கிராமத்தில் ரமேஷ் நாயக் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி பத்மா (35) என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பத்மாவதி நேற்று முன்தினம் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை பறித்து வந்து உணவு சமைத்துள்ளார். அந்த உணவை அவர்கள் குடும்பத்தோடு சாப்பிட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர்கள் அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ், 8 வயது மகள் நாகரத்தினா மற்றும் 6 வயது மகள் தீபா ஆகியோர் உயிரிழந்தனர். தற்போது பத்மாவதி அவருடைய மற்றொரு மகள் மற்றும் மகன் ஆகியோர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் நடத்தி விசாரணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தோட்டத்தில் உள்ள கொத்தவரைக்காய் செடிகளுக்கு ரமேஷ் பூச்சி மருந்து தெளித்துள்ளார். அந்த காய்கறிகளை பறித்து வந்து உணவு சமைத்ததால் அதன் பூச்சி மருந்து தாக்கி இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளி வந்தால்தான் உண்மை தெரியவரும்.
மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
