கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் என்ற 27 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதல் ஆக மாறிய நிலையில் வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகியுள்ளார்.
இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில் கவுதம் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு பின்னர் சிறுமியுடன் பழகுவதையும் தவிர்த்தார். இதன் காரணமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி வாலிபரிடம் கூறிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதற்கிடையில் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு கௌதம் தான் தந்தை என சிறுமி கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கௌதம் சிறுமியிடம் நாம் இருவரும் சமாதானமாக செல்லலாம் என கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக கௌதம் சிறுமியை அழைத்து சென்ற நிலையில் அங்கு குழந்தை பெற்ற மற்றொரு பெண்ணை காண்பித்து அவர்தான் தன்னுடைய மனைவி என்று கூறியுள்ளார். இருப்பினும் சிறுமி கெளதம் வீட்டிலேயே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கௌதம் மற்றும் சிறுமி இடைய இந்த விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில் கோபத்தில் கௌதமம் அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து தங்களுடைய சொந்த வீட்டிற்கு தீ வைத்ததோடு அதில் சிறுமியை தள்ளி கொலை செய்யும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்த சிறுமி போலீசாரிடம் இதைப் பற்றி கூறிய நிலையில் கௌதம் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்துதான் தங்கள் வீட்டிற்கு தீ வைத்ததாக கூறினார்.
ஆனால் இதனை சிறுமி மறுத்த நிலையில் பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது கௌதம் மற்றும் அவரது குடும்பத்தினர் நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கௌதம் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
