மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டத்தில் வேளாண்துறை மந்திரியாக பணிபுரிந்து வரும் மாணிக் ராவ் கோகடே சர்வ சாதாரணமாக செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சட்டசபையில் முக்கியமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் ரம்மி விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவரைப் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணிக் ராவ் கோகடே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “எனது செல்போனின் திரையில் தோன்றிய 10 முதல் 15 வினாடிகள் விளையாட்டு விளம்பரத்தை தவிர்க்க முயற்சித்தேன். எனக்கு ரம்மி விளையாட தெரியாது. அப்படியே விளையாட வேண்டும் எனில் ஒருவருக்கு ஓடிபி தேவை மேலும் வங்கி கணக்கில் இணைத்து இருக்க வேண்டும்.
எனது செல்போனை ஆய்வு செய்து கொள்ளலாம். அத்தகைய விளையாட்டுடன் எனது வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளலாம்.
நான் ராஜினாமா செய்வதற்கு அப்படி என்ன தவறு செய்தேன். யாரையாவது துன்புறுத்தி உள்ளேன்னா?, விவசாயிகளுக்கு எதிராக ஏதாவது முடிவெடுத்துள்ளேன்னா?, அல்லது ஏதாவது பொருளைத் திருடி விட்டேனா? என்னை ராஜினாமா செய்ய சொல்வதற்கு பின்னால் எந்த குற்றப் பின்னணி உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
