இந்தூரில் நள்ளிரவில் அரங்கேறிய ஒரு கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவர் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன.

மேலும் உயிரிழந்த நபரின் மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த கொடூரக் கொலையைத் திட்டமிட்டது தெரியவந்தது. கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி, தனது கணவரை வழியிலிருந்து அகற்ற அவர் தீட்டிய திட்டம் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது.

“>

இதனால் காவல்துறையினர் அந்தப் பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்துள்ளனர். விசாரணையில், தங்களது உறவுக்குத் தடையாக இருந்த கணவரைக் கொல்ல இருவரும் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். சம்பவத்தன்று நள்ளிரவில், கொள்ளையர்கள் புகுந்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, கணவரைத் தாக்கி அவர்கள் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.