ஆந்திர மாநிலம் மங்களகிரி பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியைச் சேர்ந்த கிராந்தி (25) என்ற பெண், தனது வீட்டில் ஏசி சரி செய்ய வந்த மெக்கானிக் ஷேக் அகமது (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காதலனின் ஆசை வார்த்தைகளை நம்பி, தனது கணவரைச் சட்டப்படி பிரிந்த கிராந்தி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஷேக் அகமதுவைத் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
ஆனால், இவர்களது வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் கடும் சண்டை வெடித்துள்ளது.
இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கிராந்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷேக் அகமதைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதிலும், சிகிச்சை பலனின்றி ஷேக் அகமது பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கிராந்தியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
