ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் பிண்ட்வாரா பகுதியில், ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர், கடைக்காரர் ஒருவரை ஹாக்கி ஸ்டிக்கால் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணத்தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மருத்துவர் அந்த இளைஞரின் கடைக்குள் அத்துமீறி நுழைந்து, தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து கண்ணில் பட்ட இடமெல்லாம் ஹாக்கி ஸ்டிக்கால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் அந்த இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட அவர் சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இளைஞர் மேல் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கௌரவமான தொழிலில் இருக்கும் மருத்துவரே இப்படி ரவுடித் தனத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதி வணிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பிண்ட்வாரா போலீசார், சிசிடிவி ஆதாரங்களை வைத்து அந்த டாக்டரைத் தேடி வருகின்றனர்.