விண்வெளியில் இருந்து ஒரு மர்மமான பொருள் மணிக்கு 1,35,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது என்ற தகவல் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு 3I/Atlas என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த விண்வெளிப் பொருள் சுமார் 20 முதல் 24 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இதை சாதாரண வால் நட்சத்திரம் எனக் கருதினாலும், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் அவி லோப் அதிர்ச்சிகரமான கருத்தை முன்வைத்துள்ளார். அவர், இது சாதாரண விண்கல் அல்ல, வேற்றுகிரகவாசிகளின் விண்கலமாக இருக்கலாம் என்றும், அது மனிதகுலத்துக்கு நன்மையோ தீமையோ விளைவிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த மர்மப் பொருள் 2025 நவம்பர் 21 முதல் டிசம்பர் 5க்குள் பூமிக்கு அருகில் அடையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதாவது, இன்னும் 116 நாட்களில் பூமி அருகே வரும் என்று கூறப்படுகிறது. பேராசிரியர் லோபின் கூற்றின்படி, இது ஆயுதங்களுடன் கூட வந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வானியலாளர் கிறிஸ் லிண்டாட் இந்தக் கூற்றை முழுக்க முழுக்க “முட்டாள்தனம்” என்று விமர்சித்துள்ளார். இத்துடன், பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா முன்னதாகவே 2025ல் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் எனக் கணித்திருந்தார். இதேபோல், ‘வாழும் நோஸ்ட்ராடாமஸ்’ என அழைக்கப்படும் பிரேசில் தீர்க்கதரிசி அதோஸ் சலோம் கூட இந்த அதிர்ச்சி கணிப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.