பிரிட்டனைச் சேர்ந்த 32 வயதான நிக்கோலா ஹோட்ஜஸ், தனது மரணத்தை ஒட்டிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். எபிலப்சி (வலிப்பு) நோய்க்கான மருந்தை மாற்றியதும், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
குடும்பத்தினர் அவசரமாக கென்ட் மாநிலத்தின் ஆஷ்ஃபோர்டில் உள்ள வில்லியம் ஹார்வி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 24 மணி நேரம் டயாலிசிஸ் செய்யப்பட்ட அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் குடும்பத்தினரிடம், “உயிர் பிழைப்பது 20% தான்” என்று எச்சரித்ததால், அனைவரும் அவரை இழந்துவிட்டோம் என எண்ணினர். ஆனால் அதிர்ச்சியாக, அடுத்த நாள் காலை உயிருடன் மீண்டார். இதனால் மருத்துவர்களே வியப்பில் ஆழ்ந்தனர்.
கோமாவில் இருந்து மீண்ட நிக்கோலா, இனி ஒருபோதும் பழையபடி இருக்கமாட்டார் என்று மருத்துவர்கள் முன்பே எச்சரித்ததைப் போலவே, நினைவிழப்பு, குழப்பம் போன்ற சிக்கல்களை சந்தித்து வருகிறார். ஆனாலும், தனது வாழ்க்கையை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்கியுள்ளார். “இப்போது நான் புத்திசாலித்தனமாகவும் தன்னம்பிக்கையுடனும் இருக்கிறேன். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுகிறேன்.
![]()
வாழ்க்கை மாறிவிட்டது” என்று கூறிய அவர், கோமா அனுபவம் குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். “அப்போது நான் சொர்க்கத்தை அடைந்தது போல இருந்தது. அங்கு தங்க நிற ஒளியும், அரவணைப்பும் மட்டுமே இருந்தது. அது எனக்கு பாதுகாப்பையும் அமைதியையும் கொடுத்தது. நிச்சயம் மரணத்திற்குப் பிறகு ஏதோ ஒன்று இருக்கிறது” என வெளிப்படுத்தியுள்ளார். நிக்கோலாவின் இந்தக் கதை தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
