ஷீரடியில் 5 வயது சிறுவன் ஒருவன், அவனது மாற்றான் தந்தை அனிஸ் வசீர் ஷேக் என்பவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டான். வெறும் 1,500 ரூபாய்க்காக இந்தச் சிறுவனின் கை, கால்களைக் கட்டிப்போட்டு அந்த நபர் சித்திரவதை செய்துள்ளான்.

இதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, சிறுவனின் தாத்தாவிடம் அந்தப் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளான். தாத்தா பணம் அனுப்பியும் சிறுவனை விடுவிக்காமல் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளான்.

இந்தக் கொடூரச் செயல் குறித்துத் தகவல் அறிந்த ஜால்னா போலீசார், உடனடியாகச் செயல்பட்டுச் சிறுவனை மீட்டனர். குற்றவாளி அனிஸைக் கைது செய்தனர். சம்பவம் ஷீரடியில் நடந்ததால், வழக்கு ஷீரடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

தற்போது, சிறுவனின் தாத்தா அளித்த புகாரின் பேரில், போக்ஸோ  சட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஹதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனிஸுக்கு இரண்டு நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது; போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.