பெங்களூருவில் சாலையோரம் காய்கறி விற்கும் பெண்மணி ஒருவர் சோகமாக இருப்பதைக் கண்ட அமெரிக்க வலைப்பதிவர் கிறிஸ் ரோட்ரிக்ஸ், அவருக்கு உதவ முன்வந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்தப் பெண்மணி தனது வியாபாரம் மந்தமாக இருப்பதாகக் கூறியதைக் கேட்ட கிறிஸ், அவரிடம் இருந்த ஒரு பாகற்காய்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கி அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
மொழி தெரியாத போதிலும், அங்கிருந்த மற்றவர்களின் உதவியுடன் அந்தப் பெண்மணியுடன் உரையாடிய அவர், அவருக்கு ஆறுதல் கூறியதோடு, அவர் முகத்தில் புன்னகையை வரவழைத்து அந்த நாளை அவருக்கு இனிமையானதாக மாற்றினார்.
இந்தச் சிறு கருணைச் செயலைப் பதிவு செய்து ‘இந்தியாவில் ஒரு தெரு வியாபாரிக்கு உதவினேன்’ என்ற தலைப்பில் கிறிஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், மொழித் தடைகளைக் கடந்து மனிதநேயத்துடன் அவர் செய்த இந்தச் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
“சிறு கருணைச் செயல்கள் ஒருவரின் முழு நாளையும் சிறப்பாக்கிவிடும்” என்றும், “அந்தப் பெண்மணியின் புன்னகை விலைமதிப்பற்றது” என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
