“இனிமே என்னால இந்தச் சூழ்நிலையில தொடர முடியாதுங்க!” என்று  கடிதம் எழுதிவிட்டு, மதிமுகவின் மிக முக்கியத் தூணாக வலம் வந்த தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சைதை சுப்பிரமணி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரும் ஜூன் 27-ஆம் தேதி மதிமுகவின் முக்கிய பொதுக்குழு கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த மெகா விக்கெட் சரிந்திருப்பது சென்னை அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மதிமுக தொடங்கப்பட்ட காலம் தொட்டு கடந்த 33 ஆண்டுகளாக வைகோவின் தீவிர விசுவாசியாக இருந்து, சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பவர்ஃபுல் பொறுப்புகளை வகித்த சைதை சுப்பிரமணி, தற்போது குடும்ப மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்குழு நேரத்தில் தென்சென்னையின் டாப் தளபதி இப்படி கழன்று கொண்டது மதிமுகவை பலவீனப்படுத்தும் என்பதால், அதிர்ச்சியடைந்த வைகோ அவரைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தாயக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.