பிரிட்டனை சேர்ந்த ஒரு பெண் தனது கர்ப்பத்தை அறியாமல் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஹெலன் கிரீன் என்ற பெண் தனது 45 வயது கணவர் மைக்கேல் கிரீன் 6 வயது மகளுடன் சாலை பயணமாக கனடாவின் டோராண்டோவிற்கு சுற்றுலா சென்றார். அந்த பெண்ணுக்கு அதிகாலை 1:45 மணிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் குளியல் அறைக்கு சென்றார். அங்கு தனக்கு குழந்தை பிறக்கப் போவதை அறிந்தார். சிறிது நேரத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருப்பதை அறியாத ஹெலன் தனது குழந்தையை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தையின் அழுகுரல் கேட்டு மைக்கேல் கண்விழ்த்து பார்த்தார்.

முதலில் அது பக்கத்து அறையில் இருந்து வந்த சத்தம் என நினைத்தார். ஆனால் மனைவி அங்கு இல்லாததால் குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது மனைவியின் கையில் குழந்தை இருந்ததை இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததார். உடனே மைக்கேல் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹெலனையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருவரும் தற்போது நலமாக உள்ளனர். அந்த பெண் கிருப்டிக் கர்ப்பம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது ஒரு அரிய நிலை. இந்த தருணத்தில் கடைசி கட்டம் வரை கர்ப்பமாக இருப்பதை அந்த பெண் அறிய மாட்டார்.

அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வழக்கம் போல வந்து கொண்டே இருந்தது. இதனால் தான் கர்ப்பமாக இருப்பதை அறியாமல் ஹெலன் இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு குழந்தை பிறந்ததால் ஹெலனும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். பிறந்த குழந்தைக்கு அவர்கள் ஒலிவியா என பெயர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.