இந்தோனேசியாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகனின் முன்னாள் காதலி செய்த செயல் தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. திருமண மேடையில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அந்தப் பெண், திடீரென மணமகனின் கையைப் பிடித்து முத்தமிட முயன்றார்.
மேலும் அனைவர் முன்னிலையிலும் நடந்த இந்தத் துணிச்சலான மற்றும் அநாகரீகமான செயலால் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தன் கண் முன்னாலேயே நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு ஆவேசமடைந்த மணமகள், ஒரு நொடி கூட தாமதிக்காமல் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தித் தாக்கத் தொடங்கினார்.
🚨⚡️During a wedding in Indonesia, the groom’s ex-girlfriend went up to the podium during the photo session and tried to kiss his hand in front of the bride.
The bride’s reaction was immediate. pic.twitter.com/1yo6RArbwO
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) December 26, 2025
“>
இந்த மணமகளின் இந்த அதிரடியான ரியாக்ஷன் அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களையும் விருந்தினர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. இணையதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “மணமகள் செய்ததில் எந்தத் தவறும் இல்லை, தனது திருமண நாளில் இது போன்ற நடத்தையை யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என மணமகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
