இன்றைய காலக்கட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால் எங்கு என்ன நடந்தாலும் அது உடனே வீடியோவாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவிடுகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் நடந்த ஒரு வினோதமான சம்பவம் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு சிறுவன் தனது காதலியைத் திருமணம் செய்து வைக்கக் கோரி, ஊர் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உயரமான மின் கோபுரத்தில் ஏறி அதிவேக மின்சாரம் பாயும் (High-tension) கம்பியில் தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டுள்ளான். கீழே நின்ற மக்கள் அவனை இறங்கி வருமாறு கெஞ்சிய வீடியோ பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

​இந்தச் சம்பவம் குறித்துப் பகிரப்பட்டுள்ள தகவலின்படி, அந்தச் சிறுவன் திருமண பிடிவாதத்தில் இருந்ததால் நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார், அவனது திருமணத்தைச் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். போலீசாரின் இந்த சமரசப் பேச்சிற்குப் பிறகு அவன் பத்திரமாக கீழே இறங்கி வந்துள்ளான். இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பார்த்த நெட்டிசன்கள், “இவன் நேராக மாமனார் வீட்டுக்கு (ஜெயிலுக்கு) தான் போகப்போகிறான், அங்கு போலீஸ் கவனிப்பு பலமாக இருக்கும்” என்று கிண்டலாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.