தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இன்று ஒரு மிதவைக் கப்பலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் குமார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லையைச் சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பணியின்போது, கப்பலில் இருந்த விஷவாயு மூவரையும் தாக்கியது. இதனால், மூன்று தொழிலாளர்களும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொழிலாளர்களின்  குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.