கன்னி ராசி அன்பர்களே

இன்று தயவு செய்து உணர்ச்சிவசப்பட வேண்டாம். அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். நேரத்திற்கு உணவு எடுப்பது நல்லது. சில வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபட்டால் கண்டிப்பாக வெற்றி இருக்கும். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து பேசுங்கள்.

இன்று அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மருத்துவ செலவு ஏற்படும். பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகை இருக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். வீண் விவாதங்கள் தோன்றலாம். கவனமாக இருங்கள். பெண்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனையும் சரியாகும்.

இன்று திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று மாணவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும். விளையாட்டு துறையில் ஆர்வம் இருக்கும். கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்   : ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்  :  பழுப்பு மற்றும் வெள்ளை நிறம்