துலாம் ராசி அன்பர்களே

இன்று நல்ல எண்ணங்கள் உங்களை கண்டிப்பாக வாழவைக்கும். முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உற்சாகம் மிகுந்த நாளாகவே இன்று அமையும். கேட்ட இடத்தில் பண தேவைகள் பூர்த்தியாகும். நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

இன்று உத்தியோகம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் உயரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். விருந்தினர்கள் மூலம் இன்று நன்மை நடைபெறும். நட்பால் நல்லது நடக்கும்.

இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடும். வெற்றிக்காக கடுமையாக உழைப்பீர்கள். கல்வியில் கண்டிப்பாக சாதிப்பீர்கள். முயற்சி செய்தால் அனைத்து வகையிலும் வெற்றி இருக்கிறது. இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  4 மற்றும் 5

அதிஷ்ட நிறம் :  ஆரஞ்சு மற்றும் நீல நிறம்