சிம்ம ராசி அன்பர்களே,

இன்று நிலுவையில் இருந்த பணம் வரக்கூடும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இஷ்டத்திற்கு மாறாக நடந்து கொள்ள வேண்டாம். பொறுப்பாக செயல்படுவீர்கள் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும். காரியங்களில் வெற்றி ஏற்படும். பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

சிந்தித்து செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது நல்லது. வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சாதுரியமான பேச்சால் ஆதாயம் கிடைக்கும். காரியத்தடை நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று பெண்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். துணிந்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

இன்று மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடத்திற்கு செல்ல வேண்டாம். மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக்கொள்வது நல்லது. புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்