கன்னி ராசி அன்பர்களே,

இன்று நிலுவையில் உள்ள பணம் கண்டிப்பாக வரக்கூடும். அனைவரிடமும் எதார்த்தமாக நடந்து கொள்ள முடியும். முன்கோபம் இல்லாமல் இருப்பது நல்லது. செயல்களில் வெற்றி இருக்கும். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இந்த நாள் உங்களுக்கு இன்னல்கள் தீர்ந்து நிம்மதி அதிகரிக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். எதையும் புரிந்து கொண்டு செயல்பட பாருங்கள். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். கருத்து வேறுபாடுகள் விலகி செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இன்று பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். வேண்டா வெறுப்பாக எதிலும் ஈடுபடாதீர்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உயர் கல்வியை சாதிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்