துலாம் ராசி அன்பர்களே,

இன்று நினைத்த வாழ்க்கை உங்களுக்கு மிகவும் அற்புதமாக அமையும். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட காரியங்களில் தடை விலகும் திருமண வயதை அடைந்த பெண்களுக்கு வரன்கள் தேடி வரும். எந்த முடிவையும் சிந்திக்காமல் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரிடம் கலந்து பேசி எடுப்பது நல்லது. நுட்பமான அறிவைக் கொண்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். இன்று பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். ஆடை அணிகலன் வாங்கும் சூழல் உள்ளது. மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். இன்று மாணவர்கள் பொறுமை காக்க வேண்டும். பெற்றோருக்கு மதிப்பு மரியாதை கொடுக்க வேண்டும். வார்த்தைகளை தெளிவாக உச்சரியுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் பழுப்பு நிறம்