விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சிறப்புடன் செயல்படும் சூழல் பிரகாசமாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். துயரங்கள் தீர இறை வழிபாடு முக்கியம். சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். கடன் சுமை குறையும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகி செல்லும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பேசுவது நல்லது. எந்த பிரச்சனையையும் பெரிது படுத்த வேண்டாம். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக தான் இருப்பார்கள். பெண்கள் இன்று தேவையானவற்றை பெற்றுக் கொள்வீர்கள். அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். முயற்சி செய்தால் முன்னேற்றம் காணலாம். இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் நீல நிறம்