தனுசு ராசி அன்பர்களே,

இன்று கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். துயரங்கள் தீர இறை வழிபாட்டில் நம்பிக்கை கொள்ளுங்கள். முடிந்து விடும் என்று நினைத்த காரியம் காலதாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். சாதுரியமான பேச்சு வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். ஆதாயம் உங்களை தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியை கொடுக்கும். சிரமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து விடும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பெண்கள் மாற்று கருத்தடையவர்களிடம் பார்த்து பேச வேண்டும் அக்கம் பக்கத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தடைகளை உடைத்து எரிந்து கல்வியை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்