மகரம் ராசி அன்பர்களே,

இந்த நாள் மிகவும் மகத்துவமான நாளாக இருக்கும். செல்வாக்கு மிகுந்த நாளாக இருக்கும். செல்லும் இடங்களில் சிறப்பு இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நன்மைகள் ஏற்பட கூடும். இன்று பெண்களுக்கு புரிதல் உணர்வு அதிகரிக்கக்கூடும். பெண்கள் இன்று மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தைரியமாக எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். முன் யோசனையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி வாகை சூட முடியும். பெண்களுக்கு இந்த நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். இன்று மாணவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொலைவில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு, மூன்று மற்றும் ஐந்து

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்