கும்பம் ராசி அன்பர்களே,

இன்று எதிர்த்து செயல் பட்டவர்கள் விலகி செல்லக்கூடும். பாராட்டும் புகழும் தேடிவரும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணவரவு திருப்தியை கொடுக்கும். இல்லத்திற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். மனமகிழும் செய்திகள் வீடு தேடி வரும். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவியிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைப்பீர்கள். இன்று உடல்நலத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று பெண்களுக்கு காலையில் சோம்பேறித்தனம் வெளிப்படும். சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். புத்தி கூர்மையை வெளிப்படுத்துங்கள். மற்றபடி பெண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இன்று மாணவர்கள் பெரியவர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். தானாக முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்