சிம்மம் ராசி அன்பர்களே,

இந்த நாள் தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாக கண்டிப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். சந்திராஷ்டமம் இருக்கும் காரணத்தால் பொறுமையாக எதிலும் ஈடுபட வேண்டும். அற்புதமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். திடீர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரிக்க செல்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சந்திராஷ்டம முடியும் வரை வார்த்தைகளில் கவனமாக இருங்கள். கோபத்தை தவிர்க்க பாருங்கள். யாரையும் கேலி கிண்டல் பேச்சுக்கு உள்ளாக்க வேண்டாம். திறமையால் வெற்றி பெறுவீர்கள். பெண்கள் அக்கம் பக்கத்தில் பேசும்போது கவனமாக இருங்கள். பொறுமையாக இருங்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். முன்கோபம் வெளிப்படும். இன்று மாணவர்கள் சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்