உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், குடும்பத் தகராறு ஒன்று காவல் நிலையம் முன்பே வன்முறையாக மாறியுள்ளது. ஒரு குடும்பப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக சஹாரன்பூர் காவல்துறை வளாகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். கவுன்சிலிங்கிற்கு முன்னதாகவே இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை மூண்டது.

அப்போது மாமியார் ஒருவர் தன் மருமகனின் சட்டையைப் பிடித்து சரமாரியாக அறைந்த சம்பவம், எஸ்எஸ்பி அலுவலகம் முன்பே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளமான எக்ஸ்-ஸில் (@bstvlive) பகிரப்பட்டுள்ளது.

“>

 

இஸ்லாம் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அம்பாலாவைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், வரதட்சணை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாகத் திருமணமான சில மாதங்களிலேயே அப்பெண் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பேசவே வெள்ளிக்கிழமை அன்று இரு குடும்பத்தினரும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

காவல் நிலையத்திற்கு வெளியே பேசிக்கொண்டிருந்தபோது, மருமகன் தன் மாமியாரைத் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாமியார், ஆத்திரத்தில் மருமகனைப் பலமுறை அறைந்தார். இந்தச் சண்டையைப் பார்த்த போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்துப் பேசிய போலீஸார், இது ஒரு குடும்பப் பிரச்சினை என்றும், யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.