தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசையும் சட்டசபையையும் விமர்சித்துப்பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் கைது விவகாரம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஆதரவு வீடியோ ஒன்று தற்போது அவருக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சாட்டை துரைமுருகன், “சட்டசபையைப் பூட்டினால் எலும்பை உடைப்பேன் என்றுதானே மார்க்கண்டேயன் கூறினார்? இதெல்லாம் ஒரு பேச்சா? ‘சட்டசபையைப் பூட்டுவேன்’ என்று முதலமைச்சர் விஜய் பேசலாமா? இதை ஒரு பொதுவான நபர்கள் கண்டிக்க வேண்டாமா? இப்படிப் பேசக்கூடாது என்று கூற வேண்டாமா?” என மார்க்கண்டேயனுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சாட்டை துரைமுருகனின் இந்த வீடியோ வெளியானதுமே, அவரது இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் நெட்டிசன்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பழைய காணொளி ஒன்றைத் தோண்டி எடுத்து ஆப்பு வைத்துள்ளனர்.
அந்தப் பழைய வீடியோவில் சீமான், “நான் முதலமைச்சராக வந்த பிறகு ஆளுநர் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன் என்று கூறினால் என்ன செய்வேன் தெரியுமா? சட்டசபையை இழுத்து மூடி வெல்டிங் வைத்து விடுவேன்! அதுமட்டுமல்லாமல், ஒரு நாள் முழுவதும் மத்திய அரசு அலுவலகத்தைப் பூட்டி சாவியை கைப்பாற்றி எடுத்து வந்து விடுவேன்!” என்று மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார்.
தற்போது நெட்டிசன்கள், சாட்டை துரைமுருகன் பேசிய புதிய வீடியோவை ஒரு பகுதியிலும், சீமான் “சட்டசபைக்கு வெல்டிங் வைப்பேன்” என்று பேசிய பழைய வீடியோவை மறுபகுதியிலும் இணைத்து (Split Screen Video) ஒரே காணொளியாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
ஆளுநர் கையெழுத்து போடலன்னா 'வெல்டு' வச்சு பூட்டிடுவன்னு உங்க அண்ணன் செபாஸ்டியன் சைமன் சொன்னானே… இப்போ அதுக்கு என்னடா பண்ணலாம் மஞ்சப்பொடி? 🤭😡@Saattaidurai pic.twitter.com/4mR5b7h50l
— Suresh (@Suresh199104) July 21, 2026
”முதலமைச்சர் விஜய் பேசினால் தவறு, அதையே உங்கள் அண்ணன் சீமான் பேசினால் மட்டும் சரியா? என்ன ஒரு இரட்டை வேடம்!” என்று கேள்வி எழுப்பி, சாட்டை துரைமுருகனையும் நாம் தமிழர் கட்சியினரையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வச்சு செய்து வருகின்றனர். இந்த எடிட் செய்யப்பட்ட காணொளி தற்போது எக்ஸ் (X) மற்றும் பிற சோசியல் மீடியா தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
