தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஜோசப் விஜய் அவர்களின் தொகுதி அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கச் சென்றபோது கிடைத்த அனுபவங்கள் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பி, லடலடவென வைரலாகி வருகிறது.
முந்தைய ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காகவும், குறைகளைத் தெரிவிக்கவும் அரசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களை நாடியபோது, கடுமையான அலைக்கழிப்புகளையும் அவமானங்களையும் சந்திக்க நேரிட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “முந்தைய திமுக ஆட்சியில் மனு கொடுக்கப் போனால், ‘இங்க நிக்காதீங்க, அப்புறம் வந்து பாருங்க’ என்று அலட்சியமாகப் பேசி விரட்டியடித்தனர்.
மனுக்களைக்கூட வாங்க மறுத்து, மக்களைப் பொருட்படுத்தாமல் தட்டிப் கழிப்பதே வழக்கமாக இருந்தது” எனப் பொதுமக்கள் தங்களது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந் துள்ளனர். மேலும், “சென்ற ஆட்சியில் மனு கொடுக்க வரும் மக்களுக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீரைக் கூடத் தர மாட்டார்கள். கால்கடுக்க நின்று அலுத்துப்போகும் அளவுக்கு உட்கார ஒரு சேர் கூட இருக்காது.
முதியவர்களும், பெண்களும் கடும் அவதிக்குள்ளாகினர்” என்று மக்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போதைய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தில் முற்றிலும் மாறான, மனிதநேயமிக்க சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
தங்களது குறைகளைத் தெரிவிக்க வரும் மக்களை அங்கிருக்கும் ஊழியர்கள் மிகுந்த மரியாதையுடனும், இன்முகத்துடனும் வரவேற்கின்றனர். அவர்கள் அமர்வதற்கு வசதியான நாற்காலிகள், தாகம் தீர்க்கக் குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் மிகத் துல்லியமாகச் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காகவே தனிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களைக் கனிவோடு கவனித்துக்கொள்கின்றனர். அதிகாரிகளின் இந்த அன்பான அணுகுமுறையும், தங்களை மரியாதையோடு நடத்தும் முறையும் கண்டு தொகுதி மக்கள், தங்களது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் இணைய வழியில் பேட்டியாகப் பகிர்ந்துள்ளனர்.
CM விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்களின் உணர்சி மிகுந்த வீடியோ
மக்களின் முதல்வர் @TVKVijayHQ pic.twitter.com/3uJZQCcan2
— rossy (@rossy1478178) July 21, 2026
”மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் மக்களுக்குச் சேவை செய்பவர்களே தவிர, அதிகார வர்க்கத்தினர் அல்ல” என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரம்பூர் தொகுதி மக்களின் இந்த உருக்கமான பேட்டி அடங்கிய காணொளி, சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து அதிரடியாகப் பரவி வருகிறது.
