அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கும்போது, “என்னை பற்றி அரசியல் வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன” எனக் கடும் வேதனை தெரிவித்தார்.

சென்னையின் கோட்டூர்புரம் பகுதியில், ஓ.பன்னீர்செல்வத்தை (OPS) சந்தித்ததாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், “நான் யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. இதுபோன்ற வதந்திகள் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுகின்றன. இது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது” என குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக மீண்டும் ஆட்சியில் வரவேண்டும் என்பதே தனது நோக்கமாக இருப்பதாகவும், கோடிக்கணக்கான தொண்டர்களின் கனவு நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“தொண்டர்களின் நம்பிக்கையை பேணும் வகையில் செயல்படவேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதால் கட்சிக்கும், எனக்கும் பாதிப்பு ஏற்படுகிறது” என அவர் கூறினார்.