அதிமுகவில் முக்கிய பங்களிப்பாற்றியவராக விளங்கிய ‘நமது எம்ஜிஆர்’, ‘நமது அம்மா’ ஆகிய நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்தார்.

தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைக் பெற்றது.

இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், மருது அழகுராஜ் திமுக செய்தி தொடர்பு குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் ஊடக பிரிவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதையடுத்து, கட்சியில் அவர் பெறும் பங்கு மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆவலாக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.