சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் தங்க விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.10,550 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் வெள்ளி விலை  இன்று ஒரு கிராம் 153 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 153000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருடன் ரூபாயின் மதிப்பீட்டு மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.