அதிமுக முன்னாள் சபாநாயகரும் மூத்த அரசியல்வாதியுமான தனபால், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் மருத்துவர்களின் முழுமையான கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய மாதமான ஜூலையிலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொடர்புடைய பிரச்சனைகளால் தனபால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.