மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக கட்சியின் முக்கிய முகமாகக் கருதப்பட்ட சீர்காழி நகர்மன்ற செயலாளராக செயல்பட்ட ஜெ. பாலகிருஷ்ணன், தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இவருடன் சீர்காழி நகர துணை செயலாளர் பரணிதரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினரான வெற்றிச்செல்வனும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு, மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தற்போது கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல், டெல்டா மாவட்டங்களிலும் தனது ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் திமுகவைத் தேடி வருவது, எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னேற்பாடாகவும், ஸ்டாலின் தலைமையின் மீது மக்களிடையே நிலவும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சீர்காழி நகரச் செயலாளர் ஜெ. பாலமுருகன், எம்.சி., தலைமையில் அ.தி.மு.க. நகர துணைச் செயலாளர் பா.பரணிதரன், சீர்காழி நகர்மன்ற உறுப்பினர் தெ.வெற்றிச்செல்வன்… pic.twitter.com/x1RskVBr3L
— DMK (@arivalayam) September 25, 2025
“>
இந்த அரசியல் நகர்வு, அதிமுக அமைப்பில் ஏற்கனவே நிலவும் உள்நிலை குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தரப்பினர்கள் கருதுகின்றனர்.
